முன்னோர் உணவு

ஆதிமனிதன் சுவடுகளில்….

பேலியோ மெய்ன்டெனென்ஸ் டயட் Or 2-Meal Paleo Diet

பேலியோ டயட் எடுத்து போதுமான உடல் எடையை அடைந்தவுடன் (அல்லது) பேலியோ பின்பற்ற கடினமாக இருப்பவர்கள் மெய்ன்டெனெஸ் டயட் எடுக்கலாம்

இதில் உடல் எடை குறைப்பு பேலியோவை விட சற்று குறைவாக இருக்கும்.

டிஸ்க்ளெய்மர்: இது துவக்கநிலை பேலியோ அல்லது மெய்ன்டெனெஸ் டயட்

இது உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுகள், உடல்நிலையை பொறுத்து கொடுக்கபடுவது அல்ல. உங்களுக்கு சர்க்கரை, பிபி மாதிரியான பிரச்சனைகள், வேறு உடல் நலன் சார்ந்த சிக்கல்கள் இருக்கிறதா என்பதை பார்த்து இது கொடுக்கபடுவது இல்லை. பொதுவான எடை இழப்புக்கு கொடுக்கபடுவது. இதை உங்கள் மருத்துவரிடம் காட்டி, மெடிக்கல் பரிசோதனை செய்து, அவரது அனுமதிக்கு பின்பே துவக்கவேண்டும்

நீங்கள் எடுக்கும் மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு ஏற்ப டயட்டை அட்ஜஸ்ட் செய்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் முழு ஆலோசனை பெறுவது உங்கள் கடமை

உங்கள் உடல்நலனுக்கு நீங்களே முழுபொறுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்,

காலை உணவு

பட்டர் டீ/ பட்டர் காபி (முழு கொழுப்பு பால்+ தேயிலை+ பட்டர்). அத்துடன் அவகாடோ (பட்டர் ப்ரூட்) அல்லது முட்டை 2. சர்க்கரை 1 டீஸ்பூனுக்கு மிகாமல் அல்லது ஸ்டிவியா எடுக்கலாம்

மதிய உணவு:

சிக்கன் அல்லது இறைச்சி, பேலியோ காய்கறிகளுடன்

இரவு உணவு

ஒரு சர்விங் சாதம். அதனுடன் பேலியோ காய்கறி, இறைச்சி

கோதுமை மற்றும் க்ளுட்டன் சேர்த்த தானியங்கள் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்
கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்களை ஒரு சர்விங் அரிசிக்கு பதில் எடுக்கலாம்

இரவு உணவு என எழுதி இருந்தாலும் இதை மதியம், அல்லது காலை வேலை நேரத்தை பொறுத்து எடுக்கலாம்.

தானியம் உண்டபின் 10 நிமிடம் பொறுத்திருந்து 45 நிமிடம் மெதுநடை பயில்வது கட்டாயம். சைக்கிளிங் மாதிரியான பயிற்சிகளும் செய்யலாம்

உடல்பயிற்சிக்கு முன்பு இந்த தானிய உண்டுவிட்டு செல்வதும் நல்லது. உடல்பயிற்சி செய்யாத நாட்களில் தானிய உணவை தவிர்க்கவேண்டும். உடல்பயிற்சி செய்யும் நாட்களிலும், தானியம் சேர்த்த உணவுக்கு பின் ஒரு 45 நிமிட நேரம் மெதுநடை பயில்வது கட்டாயம்.

தினம் உண்ணும் உணவுகளை 12 மணிநேரத்துக்குள் உண்டு தினம் 12 மணிநேரம் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கவேண்டும். உதா: இரவு 8 மணிக்கு சாப்பிட்டால் அடுத்தநாள் காலை 8 வரை உபவாசம் இருக்கலாம்

உண்ணகூடிய காய்கறிகள்

காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ்                                                                                                                                              முள்ளங்கி
பாகற்காய்
காரட்
பீட்ரூட்
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ                                                                                                                                                    பீர்க்கங்காய்                                                                                                                                                   புடலங்காய்                                                                                                                                                 

சுரைக்காய்

கிழங்குகள், பீன்ஸ், சுண்டல் பயறுவகைகளை குறைந்த அளவில் எடுக்கலாம்.

பழங்கள் அனைத்தும் தவிர்க்கவேண்டும். அவகாடோ, நெல்லிக்கனி, தேங்காய் போன்றவற்றை உண்னலாம்

Leave a comment

Information

This entry was posted on September 29, 2023 by .

Navigation