முன்னோர் உணவு

ஆதிமனிதன் சுவடுகளில்….

மக்கள் டயட்

பேலியோ டயட் எடுக்க ஆசை, ஆனால் பொருளாதார காரணங்களால் முடியவில்லை என்பவர்களுக்கு இந்த விலை குறைவான, லோ-கார்ப் முறை டயட் பரிந்துரைக்கபடுகிறது.

உங்களால் பேலியோ எடுக்க கூடிய பொருளாதார சூழல் இருந்தால் நீங்கள் அதை தொடர்வதை விட மேலான காரியம் எதுவுமில்லை. சுத்தமாக பின்பற்றவே முடியாது எனும் சூழலில் இருப்பவர்களுக்கு தான் இந்த “மக்கள் டயட்” பரிந்துரைக்கபடுகிறது.

இது ஏற்கனவே பேலியோவில் இருப்பவர்களுக்கு அல்ல, மூன்று வேளை இட்டிலி, தோசை, சப்பாத்தி, உப்புமா என எடுப்பவர்களுக்கு மட்டுமே அதற்கு மாற்றாக இது பரிந்துரைக்கபடுகிறது. இது வழக்கமான தமிழ்நாட்டு உணவை விட ஆரோக்கியமானது என்பதே நாங்கள் முன்வைக்கும் வாதமே ஒழிய பேலியோவை விட இது மேம்பட்டதல்ல.

பேலியோவில் இல்லாத சில உணவுகளை (உதா: நிலக்கடலை) இதில் சேர்த்திருக்கிறோம். அதனால் நிலக்கடலை நல்ல உணவு என ஆகிவிடாது. இட்டிலி, தோசையை விட இது மேல். அவ்வளவுதான். நிலக்கடலை சாப்பிட்டு அலர்ஜி ஆவது மாதிரி பிரச்சனைகள் இதில் சிலருக்கு வரலாம். அவர்களுக்கு வேறு மாற்றுகளை ஆராயலாம். உங்களுக்கு கடுமையான வயிற்றுவலி மாதிரி சிக்கல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

நான் ஏற்கனவே பேலியோவில் இருக்கிறேன். நான் இதை பின்பற்றலாமா?

திடீர் என உங்கள் பொருளாதார சூழலில் சிக்கல் வந்திருந்தால் ஒழிய வேண்டாம்….மக்கள் டயட்டுக்கு நீங்கள் மாறினால் பேலியோவில் கிடைத்த பல நன்மைகள் மறுபடி ரிவர்ஸ் ஆகலாம். இதில் பேலியோ அளவுக்கு நன்மைகள் இல்லை.

இதன் நன்மைகள்:

எடைகுறைப்பு (பேலியோ அளவுக்கு விரைவில் ஆகும் என சொல்லமுடியாது. ஆனால் வழக்கமான உனவை விட மேலான அளவில் ஆகும்)

சர்க்கரை, பிரசர் கட்டுப்பாடு (பேலியோவை விட குறைந்த அளவுகளில் இது நடைபெறும். ஆனால் சர்க்கரை, பிரசர் இதிலும் கட்டுக்குள் வரும்)

இவற்றை தாண்டி வேறு வியாதிகளை இது குணமாக்கும் என கூற இப்போது இயலாது. இப்போதைக்கு இது ஒரு எளிய எடைகட்டுபாட்டு முறை மட்டுமே.

இதில் என்ன சாப்பிடலாம்?

முதல் 30 நாட்களுக்கான உணவுப்பட்டியல்

———

காலை: பட்டர் டீ.

+
ஆப்ஷனல்: விரும்பினால் கூட 100 கிராம் தேங்காய். (ஒரு முழு தேங்காய் 400 கிரா. ஆக 1/4 தேங்காய் சாப்பிடவேண்டும்)

மதிய உணவுக்கான தேர்வு 1:  200 கிராம் வேகவைத்த அல்லது வணக்கிய நிலக்கடலை. (கூட வெல்லம் சேர்க்க கூடாது)

***அல்லது***

 

மதிய உணவுக்கான தேர்வு 2: குட்டை அரிசி வகைகளை தவிர்த்து நீளமான அரிசி வகை ஒன்றை பயன்படுத்தவும். ஒரு சின்ன கப் (40 கிராம் சமைக்காத அரிசியை எடுத்து) குக்கரில் சமைக்காமல் திறந்த பாத்திரத்தில் ஸ்டார்ச்சை வடிகட்டி இறக்கிவிட்டு சமைக்கவும். ஸ்டார்ச்சை எடுப்பது எப்படி என தெரியவில்லை எனில் பின்னூட்டத்தில் கேளுங்கள். சொல்கிறேன்.

இப்படி சமைத்த அரிசியுடன், கருவாட்டுகுழம்பு அல்லது பேலியோ காய்கறிகுழம்பு, ஆகியவற்றை எடுக்கலாம்

மாலை: 4 முட்டை, 1/4 கிலோ பேலியோ காய்கறிகள், 100 கிராம் கீரை

வாரம் 1 நாள் (அசைவர்களுக்கு)

ஆட்டு ரத்த பொறியல் 

வாரம் 1 நாள் ஆட்டு ஈரல் 

————-
இதில் அனைத்து வைட்டமின்களும், மினரல்களும் போதுமான அளவில் கிடைக்கின்றன (100% கிடைப்பதில்லை. காமன்மேன் உணவு எதிலும் அது கிடைக்காது)

யார் இதை எடுக்க வேண்டும்?

தற்போது வழக்கமான தமிழ்நாட்டு உணவில் இருப்பவர்கள் எடுக்கலாம்.

எடைகுறைப்பு நோக்கில் இருப்பவர்கள் எடுக்கலாம்

ரத்த அழுத்தம், டயபடிஸ் இருப்பவர்கள் எடுக்கலாம்

வேறு சிக்கலான வியாதிகள் (உதா: சொரியாசிஸ், லூபஸ்) இருப்பவர்கள் எடுக்கவேண்டாம்.

நல்ல உடல்நிலையில் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கும் சராசரி மனிதர்களுக்கான டயட் இது. நீங்கள் சராசரி மனிதர் இல்லை., வேறு சிக்கல்கள் உள்ளன என்றால் அதை தெரிவித்துவிட்டு டயட்டில் எதாவது மாற்றம் வேண்டுமா என கேட்கவும். மிக சிக்கலான பிரச்சனைகளை இதில் தீர்க்கமுடியாது என்பதை மனதில் கொள்ளவும். அதுக்கு பேலியோ அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்

இதை எடுக்க மருத்துவபரிசோதனை அவசியமா?

பொதுவாக இல்லை. ஆனால் வருடம் ஒருமுறை மெடிக்கல் டெஸ்ட் எடுத்துகொள்வது நல்லது. ஆனால் நாங்கள் மெடிக்கல் ரிபோர்ட் கேட்கபோவதில்லை. டயட்டால் உங்களுக்கு புதியதாக எந்த வியாதியும் வராது. டயட்டை ஆறுமாதம் எடுத்துவிட்டு அதன்பின் யதேச்சையாக டாக்டரிடம் போய் அவர் “உங்கள் யூரிக் அமிலம் 10 இருக்கு” என்றால் உடனே அதுக்கு இந்த டயட்டை காரனம் காட்ட கூடாது. டயட்டுக்கு முன் உங்கள் யூரிக் அமிலம் 12 ஆக இருந்திருக்கலாம்..யாருக்கு தெரியும்? ஆக இது வெறும் எடைகுறைப்பு டயட் மட்டுமே. பேலியோவின் பிற நன்மைகளான மெடிக்கல் ரிப்போர்ட், கன்சல்டிங், வியாதிகளுக்கான தீர்வு போன்றவற்றை இதில் செய்யமுடியாது. ஆனால் எடைகுறைப்பே உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

சுகர் இருப்பவர்கள், பிரசர் இருப்பவர்கள் மட்டும் கட்டாயமாக பாஸ்டிங் சுகர், பிபி, ஏ1சி, ஆகியவற்ரை பார்த்தபின்பே கேட்கவேண்டும்.

மக்கள் உணவு குழும முகவரி

https://www.facebook.com/groups/tamildiet/

விதிகள்:

30 நாட்கள் சீட்டிங் இல்லாமல் டயட்டை பின்பற்ரவேன்டும்.30 நாட்கள் கழித்து உங்கள் எடைகுறைப்பு எப்படி செல்கிறது என்பதை பொறுத்து டயட்டில் மாற்றம் செய்வோம்

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், வெண்ணெய், ஆட்டுகொழுப்பு போன்றவற்ரை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

வாரம் 3 நாள் 45 நிமிட உடல்பயிற்சி

தினம் சூரியகுளியல் ஆகியவை இதில் கட்டாயம். வைட்டமின் டி டெஸ்ட் எடுக்காமலேயே சொல்கிறோம். உங்களுக்கு வைட்டமின் டி பற்றாகுறை உள்ளது. அதனால் தினம் மதியம் 10- 2 ஒரு அரைமணிநேரம் வெயிலில் முடிந்தவரை குறைந்த ஆடைகளுடன் தொப்பி அணிந்து வெயில் நேரடி தோலில் படும்படி நிற்பது நல்லது (பெண்களுக்கு கூடுதலாக 15 நிமிடம்)

தினம் உண்ணும் உணவுகளை 12 மணிநேரத்துக்குள் உண்டு தினம் 12 மணிநேரம் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கவேண்டும். உதா: இரவு 8 மணிக்கு சாப்பிட்டால் அடுத்தநாள் காலை 8 வரை உபவாசம் இருக்கலாம்

உண்ணகூடிய காய்கறிகள்

காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ்                                                                                                                                              முள்ளங்கி
பாகற்காய்
காரட்
பீட்ரூட்
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ                                                                                                                                                    பீர்க்கங்காய்                                                                                                                                                   புடலங்காய்                                                                                                                                                  சுரைக்காய்

தவிர்க்கவேண்டிய காய்கறிகள்

மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய்                                                                                                                                               பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்

 

 

 

 

Advertisements

48 comments on “மக்கள் டயட்

 1. பரிமளராஜன்
  July 11, 2016

  ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கான பேலியோவை அறிமுகம் செய்துள்ள
  பெருமதிப்பிற்குரிய நியாண்டர் செல்வன் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
  பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.

  மக்கள் உணவு Uக்க செய்திகள் எளிய மக்களை சென்றடைய நம்மால் இயன்ற பணியை கட்டாயம் செய்வோம்.

 2. U.P. Murugesan
  July 12, 2016

  ஸ்டார்ச் என்பது கஞ்சி தானே ஜி..? முன்பெல்லாம் என் அம்மா அந்த வடித்த கஞ்சியை உப்பிட்டு தருவார்கள்.. சுவையோ சுவை.. 🙂

 3. Prabhakar
  July 12, 2016

  ரத்தப் பொறியலில் என்ன சத்து இருக்கிறது செல்வன் சார்?

 4. Rajan
  July 12, 2016

  ஒல்லியாய் இருப்பவர் உடல்நலம் தேற என்ன டயட் என்பதை தெரிவியுங்கள்

 5. Rajesh
  July 13, 2016

  Please suggest a diet for psoriasis

 6. veebee
  July 13, 2016

  sir,
  i dnt know why avoid fruits?

 7. bala.r.
  July 13, 2016

  Selvam ji. Night ore oru moris banana kooda eduthukka koodatha?
  Fruits la en eduvume vendan enru solugireergal?sorry to disturb u.

 8. R.Rajaswaminathan
  July 13, 2016

  Thanks a lot to paleo team onceagin

 9. Thilee
  July 13, 2016

  Hi, I am a frequent traveller. I am planning to take makkal diet, if i take makkal diet 3-4 days per week, and remaining days with regular one. Let us know whether it will create any negative impact on weight loss.

 10. DURAI RAMACHANDRAN
  July 14, 2016

  அருமையான பணி நியாண்டெர் செல்வன்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.எனக்கு தெரிந்து உங்களை இப்படி அழைக்கலாம்,’ஐயன் தேரசன்'(அன்னை தெரசா மாதிரி)வாழ்க உங்கள் தொண்டு…

 11. DURAI RAMACHANDRAN
  July 14, 2016

  Durai Ramachandran அருமையான பணி நியாண்டெர் செல்வன்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.எனக்கு தெரிந்து உங்களை இப்படி அழைக்கலாம்,’ஐயன் தெரசன்'(அன்னை தெரசா மாதிரி)வாழ்க உங்கள் தொண்டு…

 12. சக்திமான்
  July 15, 2016

  சாதத்தோடு புளி சேர்த்த குழம்பு சாப்பிடலாமா ஜி? கருவாட்டு குழம்பு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுபவர்கள் சாப்பிடலாமா?

 13. Nachimuthu doraiswamy
  July 15, 2016

  Can butter milk,or curd (low fat) be added with rice ?

 14. chitra
  July 15, 2016

  My son is under weight and height, plz suggest some diet for him.

 15. prakashc
  July 16, 2016

  Thanks sir, i reduced my sugar level

 16. K R Nagarajan
  July 16, 2016

  Best option for people under poverty line.

 17. nalinirakesh
  July 17, 2016

  Hi may I join in your group… Regards..
  Nalini Rakesh…

 18. dineshkumar
  July 19, 2016

  For Butter Tea, should we use salted butter / normal butter ? I am using Aavin Brand Butter (Not Salted)

 19. Balaji
  July 22, 2016

  Great work sir…. Thank you…..

 20. S. Kamardeen
  July 25, 2016

  Really superb. We entered in a new world through you.

 21. vasanthy2k7
  August 8, 2016

  மகிழ்ச்சி…

 22. S. Kamardeen
  August 10, 2016

  pls let us know the low carb diet details and list of foods.

 23. gowthami
  August 10, 2016

  superb sir

 24. Shanmugasundaram
  September 16, 2016

  சார் உங்களுடன் உரையாட அலைபேசி எண் தேவை கிடைக்கும் எனில் எண்ணுடைய வாட்ஸ அப் எண்.8883114677 in namakkal

 25. C.Hemalatha
  September 28, 2016

  Goodmorning Mr.and Mrs.Neander Selvan, I am following paleo diet for the past 14 days,and there is an good progress. Before starting the diet I consulted Dr. Bruno. I have IBS problem for the past 4yrs and I omit oil and fried food nearlly 2 yrs. Now in paleo diet, there is ghee, butter and coconut oil,,I am afraid of the recurrence. Because on the 8th and 9th day I got abd.pain and diarrhoea, taken the IBS drugs,then follow the diet. Sir,the IBS will disappear? Secondly the brain needs energy by taking the glucose,but there is no carb., in paleo diet, how the energy will go to brain? sir. kindly answer in my facebook. Because this is my daughter’s lap top, and she has lot of work in this, and she cannot explain to me. Thankingyou. with regards Santhi Ramamoorthy (E.R.Santhi)

 26. lakshmi
  October 7, 2016

  hai sir in makkal diet rice+paleo veg+curd edukkalma?

 27. V K Easwaran
  October 8, 2016

  ஜி, இரவு உணவு சைவர்களுக்கு குறிப்பிடப்படவில்லையே?

 28. Anitha Srinivasan
  October 20, 2016

  Hi All,
  can anybody let me know how to extract the starch from the rice when we boil it?
  Thanks in advance …

 29. mahendran
  November 4, 2016

  சார் நான் 115 கிலோ வெயிட் இருக்கேன்
  எனக்கான டயட் சொல்ல முடியுமா

 30. mallikeswari
  December 6, 2016

  62kg.sugar 7. weight loose ventam.எனக்கான டயட் சொல்ல முடியுமா?age 56.veg,nonveg.peliyo,makkaldiet.which not retuce weight?

 31. Sudhakarstella
  December 7, 2016

  Already naan Palio unavu sappittukkondirukkiren

 32. saraswathi
  December 22, 2016

  thank you sir, now i am clear

 33. saraswathi
  December 22, 2016

  i am vegetarian but i take only egg my weight is 90kgs i have no BP & Sugar weight only is my problem Pls sugges how to i Follow paleo diet, I like the post very much , I really belive it. pls pls advice me sir.

 34. Sharmila
  January 20, 2017

  Hi bro ,my weight for 87kg after delivery.i have no problems my body .But how to reduce my weight.how to follow paleo diet.pls advice me bro.

 35. Thilagavathy
  January 24, 2017

  Thankyou selvan sir

 36. sitrarasu
  February 27, 2017

  hello sir, how to i contact you.

 37. sendil
  February 27, 2017

  sir i have a weasing(asthma) problem, but my stomach is big, am interested to this paleo diet. what to do sir

 38. Miento Chakri
  February 27, 2017

  I’ve been taking this diet for a week. I have loose motions for the 3 days.
  My diet follows below.
  Tibetian tea, walnuts (not 100gm, but 50gms) with ghee (Tirumala Ghee), Pista with ghee, Beef, Eggs (omlettes and boiled), Goat, chicken.

 39. susheela
  March 7, 2017

  Dear Sir,
  Thank Sir lot of peoples used in this diet now i am not following this diet sir,
  this week i will take my blood test then i will continue my diet sir kindly help my weight reducing program .

 40. Sownthariya
  March 13, 2017

  Hello sir ,
  எனக்கு பேலியோ எடுக்க ஆசை.பொருளதார சூழ்நிலை காரணமாக எடுக்க முடியவில்லை.நான் இந்த டயட்டை பின்பற்றலாமா?எனக்கு எந்த வித பிரச்சனை இல்லை.w eight மட்டும் குறைய வேண்டும்.என் பெயர் செளந்தர்யா .வயது 27
  எடை 77

 41. Bharathiraja P
  March 21, 2017

  meat are in fact, purine rich! some vegetables you suggest also purine rich (cauliflower, asparagus, spinach & mushrooms) which naturally causes more uric acid level to increase in body. turns out complications such as gout & stones it is true or myth? diet may give different results for the age factor ? although it gives benefits such as weight loss and other benefits, still holds side effects?

  will drinking high amount of water may reduce “side effects” ?

 42. V.Sravanakumar
  March 23, 2017

  i am saravana kumar 50 yr old from madurai , I have been taking diabeties tablets for the past 5 years and also having smoking habits. i need your direction to take the paleo diet, before that where should i get the medical report.
  Please help me to walk right path.

 43. sitrarasu
  April 10, 2017

  எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது எனவே நான் எந்த வகை டயட் எடுக்க வேண்டும் தொப்பயை குறைக்க . மற்றும் ஸ்டார்ச் எப்படி வெளியேற்றுவது மற்றும் நான் அலுவலக பணி பார்ப்பதால் 10-2 என்னால் வெயில் இல் நிற்க முடியாது எனவே அதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் . நன்றியுடன் சிற்றரசு

 44. Sownthariya
  May 11, 2017

  எனக்கு பேலியோ எடுக்க ஆசை.பொருளதார சூழ்நிலை காரணமாக எடுக்க முடியவில்லை.நான் இந்த டயட்டை பின்பற்றலாமா?எனக்கு எந்த வித பிரச்சனை இல்லை.w eight மட்டும் குறைய வேண்டும்.என் பெயர் செளந்தர்யா .வயது 27
  எடை 77

 45. Balu
  June 8, 2017

  Hello sir, In makkal diet, what we need to take for dinner, as u said 4 eggs in evening. What I should take for night. Pls suggest.

 46. Bhavani
  July 6, 2017

  Good evening Doctor. I am 47. Weight 58. Height 5.4. I wish to go for makkal diet. I ahbm pure vegetarian taking milk only. Daily 3 coffee with strong sugar. I have auto immune hypothyroidism, D3 and B12 deficiency. I have been taking medicines for those problems. But for D3 fifteen days once but i dont know the measurement. O .

 47. SUSHEELA
  May 23, 2018

  SIR,
  NAN PALEO IDUKAMAL INTHA DIET IDUTHAL WAITLOSE KEDIKUMA ILLA 1 BLOOD TEST MUTTUM IDUTHU PALEO TRY PANEVA ATHEY IDUTHA COCONUT OIL KUDITHA TOILET VARATHU BUT WORKING WOMEN YAGA IRUPATHAL KASTAMA ULLATHU SOME TIMES OFFICE VARATHIAKULA PROBLEM PANATHU KINDLY REPLY

 48. ம ராஜேஷ்
  July 2, 2018

  டயட்டில் உள்ள மதிய உணவில் சாதம் எப்படி செய்வது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Information

This entry was posted on July 11, 2016 by .
%d bloggers like this: